Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அடிப்படை வசதிக்கு முன்னுரிமை

அடிப்படை வசதிக்கு முன்னுரிமை

அடிப்படை வசதிக்கு முன்னுரிமை

அடிப்படை வசதிக்கு முன்னுரிமை

ADDED : அக் 13, 2011 01:39 AM


Google News
மதுரை : ''மதுரை மாவட்டம் பனைக்குளம் ஊராட்சியில் அடிப்படை தேவை, பட்டா பெற்று தர முன்னுரிமை அளிக்கப்படும்,'' என, தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் அலாவுதீன் கூறினார். அவர் கூறியதாவது: ஊராட்சியில் பல ஆண்டுகளாக கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படவில்லை. கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மக்கள் நலம் காக்க தினமும் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படும். தெருக்களில் ரோடு அமைக்கப்

படும். மயானம் உட்பட அனைத்து தெருக்களிலும் மின் விளக்கு வசதி செய்யப்படும். அனைவரும் பயன்படும் வகையில், புதிய மேல்நிலைத் தொட்டி அமைத்து தினமும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். சுகாதார வளாகம் அமைக்கப்படும். பெரியாறு பாசன கால்வாய், சிட்டம்பட்டி வாய்க்காலை சுயநலவாதிகள் வெட்டி தங்கள் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இலவச திட்டங்கள் சென்றடைய பாடுபடுவேன். 24 மணி நேர புகார் பெட்டி அமைத்து, குறைகளை தீர்க்க பாடுபடுவேன், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us