/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/விதி மீறல்: சுவர் விளம்பரங்கள் அழிப்புவிதி மீறல்: சுவர் விளம்பரங்கள் அழிப்பு
விதி மீறல்: சுவர் விளம்பரங்கள் அழிப்பு
விதி மீறல்: சுவர் விளம்பரங்கள் அழிப்பு
விதி மீறல்: சுவர் விளம்பரங்கள் அழிப்பு
ADDED : அக் 11, 2011 02:21 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சியில் தேர்தல் விதிமுறைகள் மீறி, வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், திருவள்ளூர் நகரம் முழுவதும், தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்டக் கட்சிகள் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம் தொடர்பான டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தன. அவை ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டது. இதன்படி, நகரில் உள்ள ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, மோதிலால் சாலை, ஈக்காடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள சுவர்களில், அரசியல் கட்சியினர், தேர்தல் விளம்பரம் செய்திருந்தனர். இவை தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு மீறிய வகையில் இருந்ததையொட்டி, நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், நகராட்சி ஊழியர்கள் அவற்றை அழித்தனர். இதுவரை, 60க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி, சுவர் விளம்பரம் செய்தாலோ அல்லது டிஜிட்டல் பேனர் வைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் தெரிவித்துள்ளார்.


