இந்தியாவை காக்கும் இயந்திர பறவை -இந்திய விமானப்படை தினம்
இந்தியாவை காக்கும் இயந்திர பறவை -இந்திய விமானப்படை தினம்
இந்தியாவை காக்கும் இயந்திர பறவை -இந்திய விமானப்படை தினம்
ADDED : அக் 07, 2011 10:56 PM

இந்தியாவின் பாதுகாப்புக்கு அரணாக விளங்கும் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, மற்ற நாடுகளின் வான்வெளித் தாக்குதலில் இருந்து நமது நாட்டை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்திய விமானப்படை 1932, அக்.,8ல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்., 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெறுவதற்கு முன் இரண்டாம் உலகப்போரில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. 1947ல் சுதந்திரம் பெற்ற பின் இந்தியா, நான்கு முறை பாகிஸ்தானுடனும், ஒரு முறை சீனாவுடனும் போரில் ஈடுபட்டது. இதில் இந்திய விமானப்படையும் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டது.
நான்காவது இடம் : இந்திய விமானப்படையில் 1,70,000 வீரர்கள் பணி புரிகின்றனர். 1400க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பணியில் உள்ளன. விமானப்படையில் பைட்டர்ஸ், டிரெய்னர்ஸ், டிரான்ஸ்போர்ட்ஸ், ஹெலிகாப்டர், மைக்ரோலைட்ஸ், அல்ட்ராலைட் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகள் உள்ளன. பாதுகாப்பு துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது 'பரம் வீர் சக்ரா' விருது. நாட்டின் முதல் போர் விமானம் 'வெஸ்ட்லேண்ட் வாபிதி'. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4வது பெரியதாக இந்திய விமானப்படை திகழ்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் , சிறப்பு வாய்ந்த போர் விமானங்கள் ஆகியவற்றை விமானப்படை கொண்டுள்ளது.
ஆர்வம் வேண்டும்.
பெரும்பாலான இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனங்களில் சேர்வதையே விரும்புகின்றனர். விமானப்படையில் சேர்வது பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடம் குறைவாக உள்ளது. இதனால் தான் விமானப்படையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. விமானப்படையில் சேர இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள www.careerairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


