Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு வீடுகளில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு வீடுகளில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு வீடுகளில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு வீடுகளில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

ADDED : ஜூலை 24, 2011 01:17 AM


Google News

திருச்சி: திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து இரண்டு பஞ்சாயத்து மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டு உள்ளது. இதை 65 வார்டாக உயர்த்த அரசு திட்டமிட்டது. இதற்காக அருகில் உள்ள பாப்பாக்குறிச்சி, ஆலத்தூர், எல்லக்குடி, கீழகல்கண்டார்கோட்டை ஆகிய 4 பஞ்சாயத்துக்குள் மற்றும் திருவெறும்பூர் டவுன் பஞ்சாயத்து ஆகியவற்றை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்து, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. மாநகராட்சியுடன் இணைந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து மாநகராட்சி விளக்கியது. ஆனால், இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



'மாநகராட்சியுடன் இணைந்தால் தங்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் வசதி கிடைக்காது; சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயரும்; ஏதாவது பிரச்னை வந்தால் 10 கி.மீ., தூரத்தில் உள்ள திருச்சிக்கு தான் செல்ல வேண்டும். எனவே, தொடர்ந்து பஞ்சாயத்திலேயே நீடிக்க விரும்புகிறோம்' என அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர். ஆர்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில், நேற்று காலை கீழகல்கண்டார்கோட்டை, ஆலத்தூர் பகுதிகளில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். தவிர, நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தையும் புறக்கணித்தனர்.



ஆலத்தூர் பஞ்., அலுவலகம் முன் தலைவர் செல்லத்துரை தலைமையில் கிராமசபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைவர் மற்றும் அலுவலர்கள் வந்திருந்தனர். பெண்கள் உள்பட 200 பேர் ஊர்வலமாக வந்து மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து மனு கொடுத்துவிட்டு வெளியேறினர். தகவலறிந்த திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகண்ணன் அங்கு வந்து, பொதுமக்கள் புறக்கணிப்பு குறித்து தலைவரிடம் பேசினார். அதேபோல், கீழகல்கண்டார்கோட்டையிலும் மக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us