/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அரிசி மில்லில் தீ: 250 நெல் மூட்டைகள் சேதம்அரிசி மில்லில் தீ: 250 நெல் மூட்டைகள் சேதம்
அரிசி மில்லில் தீ: 250 நெல் மூட்டைகள் சேதம்
அரிசி மில்லில் தீ: 250 நெல் மூட்டைகள் சேதம்
அரிசி மில்லில் தீ: 250 நெல் மூட்டைகள் சேதம்
ADDED : ஜூலை 25, 2011 11:57 PM
திருத்தணி : திருத்தணி அருகே, தனியார் அரிசி மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் மற்றும் பொருட்கள் சேதமாயின.திருத்தணி அடுத்த, வள்ளியம்மைபுரம் அருகே, தனியார் அரிசி மில் இயங்கி வருகிறது.
இந்த மில்லில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து, அரைத்து செல்வர். நேற்று முன்தினம் இரவு, அரிசி மில்லில் திடீரென தீப்பிடித்தது.இதில், 250க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், தீயில் எரிந்து நாசமாயின. மேலும், மில்லில் இருந்த, எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட, 5 லட்ச ரூபாய் பொருட்கள் சேதமாயின. மில் உரிமையாளர் ராமபாபு, திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


