/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஊர்வலம் நாளை நடக்கிறதுபதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஊர்வலம் நாளை நடக்கிறது
பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஊர்வலம் நாளை நடக்கிறது
பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஊர்வலம் நாளை நடக்கிறது
பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஊர்வலம் நாளை நடக்கிறது
ADDED : ஜூலை 27, 2011 11:14 PM
சிதம்பரம் : பதிவு மூப்பு அடிப்படையில் தொடர்ந்து பணி நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் நாளை (29ம் தேதி) தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடத்தப்படுகிறது.இதுகுறித்து சங்க மாநிலத் தலைவர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:பட்டதாரி ஆசிரியர்களை தற்போதுள்ள நடைமுறையின்படி பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 5,800 பி.எட்., பட்டதாரிகளுக்கு விரைவில் பணி நியமனத்திற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி நியமன ஆணை வழங்க வேண்டும்.கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 12 ஆயிரம் பி.எட்., பட்டதாரிகளுக்கும், பதிவு மூப்பில் உள்ள 20 ஆயிரம் பி.எட்., பட்டதாரிகளுக்கும் தொடர்ந்து பதிவு மூப்பு அடிப்டையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து சிந்தாதிரிபேட்டை வரை நாளை (29ம் தேதி) ஊர்வலம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.