/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தண்ணீர் வரத்து அதிகரிப்பு குற்றாலத்தில் குளிக்க தடைதண்ணீர் வரத்து அதிகரிப்பு குற்றாலத்தில் குளிக்க தடை
தண்ணீர் வரத்து அதிகரிப்பு குற்றாலத்தில் குளிக்க தடை
தண்ணீர் வரத்து அதிகரிப்பு குற்றாலத்தில் குளிக்க தடை
தண்ணீர் வரத்து அதிகரிப்பு குற்றாலத்தில் குளிக்க தடை
ADDED : ஜூலை 30, 2011 01:05 AM
குற்றாலம்:குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து
சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.குற்றாலத்தில் கடந்த சில
தினங்களாக அருவிகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது.
குற்றாலத்தில் நேற்று
காலை முதல் மாலை வரை குளிர்ந்த தென்றலுடன் சாரல் மழை பெய்தது. மதியம் 3
மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி
மற்றும் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில்
பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் விழுந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க
தடை விதிக்கப்பட்டது. இதனால் புலியருவி, பழைய குற்றாலத்தில் சுற்றுலா
பயணிகள் கூட்டம் அலைமோதியது.இன்று (30ம் தேதி) ஆடிஅமாவாசை என்பதால்
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.