ADDED : ஆக 01, 2011 04:09 AM
சேலம்: சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதை
தொடர்ந்து, தி.மு.க.,வினர் ஆங்காங்கே பஸ் கண்ணாடி உடைப்பு, பேனர் கிழிப்பு
சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு, கொண்டலாம்பட்டி மற்றும்
ஏத்தாப்பூர் பகுதியில் அவ்வழியாக வந்த அரசு பஸ்களின் மீது சிலர் கல்வீசி
தாக்குதல் நடத்தி உள்ளனர். அதில், பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு பாதிப்பு இல்லை. இது குறித்து போலீஸில்
அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து
விசாரணை நடந்து வருகிறது. போலீஸார் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.