/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மகளிர் சுகாதார வளாகத்தை அதிகாரி திடீர் ஆய்வுமகளிர் சுகாதார வளாகத்தை அதிகாரி திடீர் ஆய்வு
மகளிர் சுகாதார வளாகத்தை அதிகாரி திடீர் ஆய்வு
மகளிர் சுகாதார வளாகத்தை அதிகாரி திடீர் ஆய்வு
மகளிர் சுகாதார வளாகத்தை அதிகாரி திடீர் ஆய்வு
ADDED : ஆக 09, 2011 02:54 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஏ.நாகூர் ஊராட்சிக்குட்பட்ட கரப்பாடியில் அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
இதில், பங்கேற்ற மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மனோகர், கூட்டத்திற்கு பின் ஊராட்சிகளை ஆய்வு செய்தார். ஏ.நாகூர், பூசாரிபட்டி ஊராட்சிகளிலுள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பார்வையிட்டார்.'அனைத்து மகளிர் வளா கத்திலும், சுகாதாரத்தை முறையாக பராமரிக்க வேண்டும்' என அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஒன்றிய அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லாபிச்சை உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலும் மகளிர் சுகாதார வளாகம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பழனிசாமி (ஊராட்சிகள்) ஆகியோர் உடனிருந்தனர்.


