Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தகவல் தொழில்நுட்ப துறையால் மாற்றம் வரும்

தகவல் தொழில்நுட்ப துறையால் மாற்றம் வரும்

தகவல் தொழில்நுட்ப துறையால் மாற்றம் வரும்

தகவல் தொழில்நுட்ப துறையால் மாற்றம் வரும்

ADDED : ஆக 18, 2011 09:46 PM


Google News
ராஜபாளையம்:''தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியால், ஆன்லைனில் ஆர்டர் வாங்கும் மாற்றம் ஏற்படும்'' என, ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா ராஜபாளையத்தில் பேசினார்.ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா தலைமை வகித்து பேசுகையில், ''தொழிலும், வியாபாரமும் சேர்ந்தது நமது சங்கம். தொழில்கள் பெருகவேண்டும், உற்பத்தி பொருள்கள் விற்பனையாக வர்த்தகமும் பெருகவேண்டும்.

வர்த்தகத்தில் பெரிய மாற்றங்கள் வர உள்ளதால், அதற்கேற்ப நாமும் மாறிக்கொள்ளவேண்டும். தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ந்து வருகிறது. வீடுகளில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் வரும், அந்த பொருட்களை குறித்த நேரத்தில் சேர்க்க வேண்டும். வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், சில்லரை வியாபாரத்திற்கு தயாராகி வருகிறது.

இது எங்கு கொண்டு செல்லும் என தெரியவில்லை,'' என்றார்.கலெக்டர் பாலாஜி பேசுகையில், ''விருதுநகர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல், காட்டன், பிரிண்டிங் போன்ற ஐந்து வகை தொழில்கள் சுதந்திரபோரின் போதே இருந்து உள்ளன. இந்தியாவில் டச்சு கம்பெனியினர் இருந்தபோதும், பிரிட்டிஷ்காரர்கள் டெக்ஸ்டைல் பொருள்களை இறக்குமதி செய்தபோதும் இந்த தொழில்கள் சில இடங்களில் நலிவடைந்தன. ராஜபாளையத்தில் மட்டும் இந்த தொழில் நசிவடையாமல் இருந்தது. இதற்கு இங்குள்ள மனிதவளம், மூலப்பொருள், தொழில்நுணுக்கம் தான் காரணம். தொழில் நுணுக்கமும், மனிதவளமும் இருப்பதால் பிரிட்டன், அமெரிக்கா வளர்ந்து உள்ளன'' என்றார்.விழா ஏற்பாடுகளை இணைசெயலாளர் வெங்கடேஸ்வர ராஜா மற்றும் சங்க அலுவலர்கள் செய்து இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us