Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

ADDED : ஆக 22, 2011 12:54 AM


Google News
கடலூர் : தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மேலாண்மைக் குழு புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நடராஜன் வரவேற்றார். மாநில பொதுச்செயலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். தலைமை நிலையச் செயலராக சந்திரமணி நியமிக்கப்பட்டார். திருமண தகவல் மைய மேலாளராக ஜெயமூர்த்தியும், உதவி மேலாளராக கிரிஸ்டினா ராணியும் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளும், மேலாண்மைக்குழு உறுப்பினர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர். பொதுச் செயலர் சுப்ரமணியன், புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களை பாராட்டிப் பேசினார்.

கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 3,500 ரூபாய் தமிழக அரசு வழங்கவேண்டும். மருத்துவப்படியை 100 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us