Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நல உதவிகள் வழங்கல்

நல உதவிகள் வழங்கல்

நல உதவிகள் வழங்கல்

நல உதவிகள் வழங்கல்

ADDED : ஆக 26, 2011 11:25 PM


Google News
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் மற்றும் சவேரியார் பட்டணத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு ஸ்டேட் வங்கி சார்பில் இலவச உதவிகள் வழங்கும் விழா, இப்தார் நோன்பு திறப்பு விழா நடந்தது.

வங்கி மேலாளர் துளசிராம், மார்க்கெட்டிங் அதிகாரி ராஜகுரு தலைமை வகித்தனர். பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலை மை ஆசிரியர் முகம்மது சுலைமான் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் தாஹிர் உசேன் வரவேற்றார்.தலைமை ஆசிரியர்கள் முகம்மது சுலைமான் (பள்ளிவாசல் மேல்நிலைபள்ளி), ஞானதாஸ் (அரசு மேல்நிலைபள்ளி), ரவீந்திரன்டேவிட் (டி.இ.எல்.சி., உயர்நிலைபள்ளி), காதர்ஷா (பள்ளிவாசல் தொடக்கபள்ளி), மரியசெல்வி (சவேரியார்பட்டணம் செயிண்ட் சேவியர் குளூனி மேல்நிலைபள்ளி), சவேரியார் பட்டணம் பாதிரியார் பிரான்சிஸ் தைரியராயன், என்.சி.சி., அதிகாரி துரைப்பாண்டியன், மாணவர் நுகர்வோர் நல மன்ற அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us