Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போலீஸ் பிடி தளர்ந்தது; தாறுமாறாக "பார்க்கிங்'

போலீஸ் பிடி தளர்ந்தது; தாறுமாறாக "பார்க்கிங்'

போலீஸ் பிடி தளர்ந்தது; தாறுமாறாக "பார்க்கிங்'

போலீஸ் பிடி தளர்ந்தது; தாறுமாறாக "பார்க்கிங்'

ADDED : ஆக 30, 2011 12:49 AM


Google News
திருப்பூர் : 'பார்க்கிங்' மீதான போலீஸ் நடவடிக்கை தளர்ந்துள்ளதால், திருப்பூர் மாநகர ரோடுகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

ரோட்டில் இருபுறமும் 'பார்க்கிங் செய்யப்படும் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களால், விபத்து அபாயம் உள்ளது.தொழில் நகரான திருப்பூரில் பிரதான ரோடுகள் எப்போதும் வாகன போக்குவரத்தில் மூழ்கியுள்ளன. விபத்துகளை தடுக்கும் வகையில், வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில், குமரன் ரோடு, அவினாசி ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு மட்டுமின்றி முக்கிய இணைப்பு சாலைகளிலும் எல்லை கோடுகள் வரைந்து, வாகன நிறுத்தத்தை வரைமுறைபடுத்தினர். எல்லை தாண்டி நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது; டயர்களில் காற்றை திறந்து விடுவது என போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.கெடுபிடிகளுக்கு பயந்து வாகன ஓட்டிகள், விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை நிறுத்தினர். இந்நிலையில் 'பார்க்கிங்' மீதான போலீசாரின் பிடி தற்போது தளர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டத்துக்கு வாகனங்களை ரோட்டில் 'பார்க்கிங்' செய்ய துவங்கியுள்ளனர். போக்குவரத்து மிகுந்த குமரன் ரோடு, அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடுகள் மட்டுமின்றி இணைப்பு சாலைகளிலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்படும் வாகனங்களால், விரைந்து செல்லும் வாகனங்களுக்கு வழிவிட ரோட்டோரத்தை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். பாதசாரிகள் நடந்து செல்லும்போது, வேறு வழியின்றி வாகனங்களை திடீரென நிறுத்த வேண்டியுள்ளதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விடும் அபாயம் உள்ளது. பணிகள் முடிந்ததும், நிறுத்தியிருக்கும் வாகனங்களை எடுக்கும்போது, ரோட்டில் வாகனங்கள் செல்லமுடியாமல், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.நெரிசல் ஏற்படும்போது, இணைப்பு சாலைகளை பயன்படுத்த முற்படுகின்றனர். குறுகலான இணைப்பு சாலைகளிலும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் நிறுத்தப்படுவதால், ரோட்டை பயன்படுத்த முடியாமல் திரும்பிச்செல்லும் நிலை ஏற்படுகிறது.போக்குவரத்து மிகுந்த திருப்பூரில் வாகன நெரிசல், விபத்துகளை தடுக்கும் வகையில், 'பார்க்கிங்'கை வரைமுறைப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us