/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி.,ரயில்வே ஸ்டேஷன் கழிப்பறை கட்டும் பணி அடிப்படை வசதிக்காக அல்லல்படும் பயணிகள்ஸ்ரீவி.,ரயில்வே ஸ்டேஷன் கழிப்பறை கட்டும் பணி அடிப்படை வசதிக்காக அல்லல்படும் பயணிகள்
ஸ்ரீவி.,ரயில்வே ஸ்டேஷன் கழிப்பறை கட்டும் பணி அடிப்படை வசதிக்காக அல்லல்படும் பயணிகள்
ஸ்ரீவி.,ரயில்வே ஸ்டேஷன் கழிப்பறை கட்டும் பணி அடிப்படை வசதிக்காக அல்லல்படும் பயணிகள்
ஸ்ரீவி.,ரயில்வே ஸ்டேஷன் கழிப்பறை கட்டும் பணி அடிப்படை வசதிக்காக அல்லல்படும் பயணிகள்
ADDED : செப் 03, 2011 12:22 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறை கட்டும் பணி பாதியில் நிற்பதால், பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்கோயில் இருப்பதால், வெளிமாநிலம், நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.
வடமாநில பக்தர்கள் பெரும்பாலானோர் ரயில்களில் வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரயில் மூலம் மதுரை,விருதுநகருக்கு தினமும் வேலைக்கும் பலர் சென்று வருகின்றனர். ஆனால் , ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் சிரமமடைகின்றனர்.
2வது பிளாட்பார்ம் செல்ல பால வசதி இல்லை . நிழற்குடை இல்லாததால் பயணிகள் மழை , வெயிலில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றுவர பஸ் வசதியும் இல்லை. இங்குள்ள கழிப்பறையில் புதர் மண்டி இருந்தது. இது தொடர்பாக 'தினமலர்'இதழில் செய்தி வெளியானது. இதன் பின் ரயில்வே துறை சார்பில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த இரு மாதங்களுக்கு முன், அதற்கான அஸ்திவாரத்திற்கான பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டி எந்த வேலையும் நடக்காமல் பாதியில் நிற்கிறது. இதனால், கழிப்பறை இல்லாமல் பயணிகள் சிரமமப்படுவதோடு, பள்ளத்தில் சிறுவர்கள் விழுவதற்கும் வாய்ப்புள்ளது. பாதியில் நிறுத்தப்பட்ட கழிப்பறை பணியை விரைவில் முடிக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


