கச்சா எண்ணெய்க்காக 5 பில்லியன் டாலர்: ஈரானுக்கு இந்தியா வழங்கியது
கச்சா எண்ணெய்க்காக 5 பில்லியன் டாலர்: ஈரானுக்கு இந்தியா வழங்கியது
கச்சா எண்ணெய்க்காக 5 பில்லியன் டாலர்: ஈரானுக்கு இந்தியா வழங்கியது
ADDED : செப் 04, 2011 05:00 PM
டெஹரான்: ஈரானுக்கு இந்தியா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்தற்கான பாக்கித் தொகை 5 பில்லியன் ( ரூ.
500 கோடி) டாலரை வழங்கியது. ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது நாள் ஒன்று 4 லட்சம் பேரல்களை இந்தியாவிற்கு ஈரான் ஏற்றுமதி செய்கிறது. இது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 12 சதவீதம் ஆகும். இதற்காக இந்தியா 12 பில்லியன் டாலரை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஈரானின் அணுஆயுத திட்டம் தொடர்பாக அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. இதனால் ஈரானின் முக்கிய வங்கிகள் பண பரிவர்த்தனையின்றி முடங்கின. இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி ஈரானுக்கு வழங்க வேண்டிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான பாக்கித்தொகையினை திடீரென நிறுத்தி வைத்தது. இதனால் கோபமடைந்த ஈரான் இனி இந்தியாவிற்கு எண்ணெய் வழங்கப்போவதில்லை என அறிவத்தது. இந்நிலையில் ஈரான் மத்திய வங்கியின் கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதிகான பாக்கித்தொகை 5 பில்லியன் டாலர் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்


