/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சிலிண்டர் சப்ளையில் இடைத்தரகர் ஆதிக்கம்சிலிண்டர் சப்ளையில் இடைத்தரகர் ஆதிக்கம்
சிலிண்டர் சப்ளையில் இடைத்தரகர் ஆதிக்கம்
சிலிண்டர் சப்ளையில் இடைத்தரகர் ஆதிக்கம்
சிலிண்டர் சப்ளையில் இடைத்தரகர் ஆதிக்கம்
ADDED : செப் 04, 2011 09:40 PM
பழநி:கள்ளிமந்தையம் அருகே பொருளூரில் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில், இடைத்தரகர் ஆதிக்கம் நிலவுகிறது.
இக்கிராமத்திற்கு பழநியில் உள்ள ஏஜன்சி மூலம் காஸ் வழங்கப்படுகிறது. பல
சந்தாதாரர்களின் கார்டுகள், இடைத்தரகர்கள் வசம் உள்ளன. இவற்றைப்
பயன்படுத்தி, சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இக்கிராமத்தைச்
சேர்ந்த தங்கவேலு கூறியது:சிலிண்டர்களை பழநியில் இருந்து இடைத்தரகர்கள்
எடுத்து வருகின்றனர். வாகனங்களை இயக்க ஏஜன்சியினர் மறுக்கின்றனர். நான்கு
மாதங்களாக, உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைக்கவில்லை, என்றார்.
இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, சிலிண்டர் முறைகேடாக
விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.


