Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வங்கி திட்ட விழிப்புணர்வு முகாம்

வங்கி திட்ட விழிப்புணர்வு முகாம்

வங்கி திட்ட விழிப்புணர்வு முகாம்

வங்கி திட்ட விழிப்புணர்வு முகாம்

ADDED : செப் 04, 2011 11:40 PM


Google News
பொள்ளாச்சி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் வரும் 30ம் தேதி வரை சேமிப்பு இருப்பு தொகைக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் சுனில் கூறியதாவது:பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடக்கிறது.

முகாமின் பணிக்காக வங்கியின் சார்பில் ஒருவர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். வீடு வீடாக சென்று வங்கியில் உள்ள திட்டங்கள் மற்றும் அதில் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.கடந்த மாதம்(ஆக. 1ம் தேதி) முதல் இதுவரை 200க்கும் மேற்பட்ட புதிய வாடிக்கையாளர்கள் புதிதாக சேமிப்பு இருப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.முகாமின் மூலம் வங்கியில் வழங்கப்பட்டு வரும் ஏ.டி.எம்., சேவை, 'இன்டர்நெட் பேங்க்கிங்', 'இ-பேமென்ட்' போன்ற சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us