ADDED : செப் 06, 2011 10:28 PM
திட்டக்குடி : திட்டக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் சுப்ரமணியம் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார்.
ஆசிரியர்களின் சிறந்த சேவையைப் பாராட்டி தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரால் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தி.இளமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் நல்லாசிரியர் விருது பெற்றார். இவர் 26 ஆண்டு காலமாக கல்விச்சேவை புரிந்ததை பாராட்டி இவ்விருது வழங்கப் பட்டது.


