ADDED : செப் 07, 2011 12:25 AM
வால்பாறை : வால்பாறை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான
உபகரணங்கள் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.வால்பாறை டவுன் பகுதியில் உள்ள
அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளிக்கு பாரத ஸ்டேட் வங்கி
சார்பில் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பெஞ்சு மற்றும் சேர்
வழங்கப்பட்டது.
அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 2
ஸ்பீக்கர் வழங்கப்பட்டது. பொருட்களை பாரத ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளர்
கிருஷ்ணசாமி உத்தரவின் பேரில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வங்கி
கிளை மேலாளர் ராஜேந்திரன் வழங்கினார். விழாவில் வங்கி காசாளர் அழகர், அரசு
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சோமு, உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் ஜெயசக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். மடத்துக்குளம்:
மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கொழுமம் இணைப்பு மையத்தில் 16
மாணவர்கள் படித்து வருகின்றனர். 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில்
படித்து வரும் இந்த மாணவர்களுக்கு சீருடை, குறிப்பேடு, புத்தகப்பை,
பாடப்புத்தகம், காலணி மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. பள்ளி
வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்குஉதவி தொடக்க கல்வி அலுவலர் சுமதி தலைமை
வகித்தார். தலைமையாசிரியர் தாமரை செல்வி முன்னிலை வகித்தார். உதவி
தொடக்ககல்வி அலுவலர் உபகரணங்கள் வழங்கி பேசியதாவது: 'பெற்றோர்கள் தங்கள்
குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்பவேண்டும். இடையில் நின்ற மாணவர்களை
கண்டறிந்து இணைப்பு மையத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களின்
வயதுக்கு தகுந்த படி கல்வி வழங்கப்படுகிறது. முழுஅளவில் மற்ற மாணவர்களுக்கு
நிகராக தயார் ஆனவுடன் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்' என்று கூறினார்.
கிராமக்கல்விக்குழு உறுப்பினர் கணேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள்
பங்கேற்றனர். பொள்ளாச்சி: குமரன்நகர் துவக்கப்பள்ளியில், பள்ளி இடைநின்ற
மாணவர்கள் 25 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. வட்டார வள
மைய மேற்பார்வையாளர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர்
சங்க தலைவர் மூசா, இளைஞர் மன்ற உறுப்பினர் நடராஜ் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.


