உடல், மனரீதியாக பாதிக்க வைக்க முயற்சி : மாஜி வீரபாண்டி ஆறுமுகம் குற்றச்சாட்டு
உடல், மனரீதியாக பாதிக்க வைக்க முயற்சி : மாஜி வீரபாண்டி ஆறுமுகம் குற்றச்சாட்டு
உடல், மனரீதியாக பாதிக்க வைக்க முயற்சி : மாஜி வீரபாண்டி ஆறுமுகம் குற்றச்சாட்டு
ADDED : செப் 07, 2011 11:35 PM
திருச்சி: ''உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கும் வகையில், போலீசார் என்னை அலைக்கழிக்கின்றனர்,'' என, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குற்றம் சாட்டினார். நேற்று முன்தினம், சேலத்திலிருந்து, திருச்சி செல்லும் வழியில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு, உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு, 12.30 மணிக்கு திருச்சி மத்திய சிறைக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.
சிறைக்குள் செல்லும் முன், வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., அரசு, பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தி.மு.க.,வை பலவீனப்படுத்த முடியாது. என்னை உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிக்கும் வகையில், அரசின் உத்தரவுப்படி, போலீசார் அலைக்கழிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


