/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டி.கோட்டாம்பட்டி நூலகம் விரிவுபடுத்த வலியுறுத்தல்டி.கோட்டாம்பட்டி நூலகம் விரிவுபடுத்த வலியுறுத்தல்
டி.கோட்டாம்பட்டி நூலகம் விரிவுபடுத்த வலியுறுத்தல்
டி.கோட்டாம்பட்டி நூலகம் விரிவுபடுத்த வலியுறுத்தல்
டி.கோட்டாம்பட்டி நூலகம் விரிவுபடுத்த வலியுறுத்தல்
ADDED : செப் 08, 2011 10:30 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி நூலகம் விரிவுப்படுத்தும்
பணிக்காக, நூலக இடத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
பொதுநூலகத்துறை சார்பில் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி நூலகம்
இயங்கி வருகிறது. இதில் 33 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
தினமும் 150க்கும் மேற்பட்ட வாசகர்கள் இங்கு வருகின்றனர். 2,100 பேர்
நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு 15 இருக்கைகள் மட்டுமே உள்ளதால்
மக்கள் போதிய இடவசதியின்றி அவதிப்படுகின்றனர். இத்துடன், நூலகத்திற்கு
வரும் புதிய நூல்களை ரேக்கில் வைக்க இடவசதியில்லாமல் உள்ளது.பொள்ளாச்சி
நூலகர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி நூலகம் கடந்த 1958ம்
ஆண்டு துவங்கப்பட்டு பகுதி நேர நூலகமாக செயல்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு
முழு நேர நூலகமாக மாற்றபட்டது. நூலக பகுதி ஐந்து 'சென்ட்' இடத்தில்
அமைந்துள்ளது. ஆனால், வழங்கப்பட்டுள்ள பாதியிடத்தில் மட்டுமே நூலகம்
கட்டபட்டுள்ளது. அதனால், இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு இருக்கை
பற்றாக்குறை ஏற்படுவதுடன் நூலகத்தில் புத்தகங்கள் வைக்க இடம் போதாத நிலை
உள்ளது. அதனால், இருக்கும் இடத்தில் நூலகம் விரிவாக்கம் செய்வது குறித்து
மேலதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது. நூலகத்திற்கு பட்டா வழங்கப்பட்டவுடன்
நூலகம் விரிவுப்படுத்தும் பணி துவங்கும் என எம்.பி., தெரிவித்துள்ளார்.
அதனால், தற்போது பட்டா வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பட்டா வழங்கப்பட்டவுடன் எம்.பி., எம்.எல்.ஏ., நிதியிலிருந்து நூலகம்
விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.


