/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைதுபெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
ADDED : செப் 10, 2011 03:41 AM
ஓசூர்: ஓசூரில் பெண்ணை தாக்கி நகையை பறிக்க முயன்ற பைக்கில் வந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள என்.ஜி.ஜி.ஓ., காலனி ரமனஸ்ரீ நகரை சேர்ந்தவர் சீனிவாசன்.
இவரது மனைவி சரஸ்வதி (46). இவர் நேற்று காலை பொருட்கள் வாங்க கடைக்கு பாகலூர் சாலையில் நடந்து சென்றார்.அந்த வழியாக பைக்கில் வந்த இரு வாலிபர்கள், திடீரென சரஸ்வதி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதிர்ச்சியடைந்த சரஸ்வதி கூச்சல் போட்டார். இதை பார்த்த அங்கு நின்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பைக்கில் தப்ப முயன்ற கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர்.ஒருவன் பிடித்தவர்களை தள்ளி விட்டு பைக்கில் தப்பியோடிவிட்டான். சிக்கிய வாலிபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். சம்பவம் நடந்த இடம் ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன் என்பதால் டவுன் போலீஸார் கொள்ளையனை ஹட்கோ போலீஸில் ஒப்படைத்தனர்.ஹட்கோ போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபர் கர்நாடகா மாநிலம் துங்பூரை சேர்ந்த சிவா என்பது தெரிந்தது. தப்பியோடிய மற்றவனை போலீஸார் தேடி வருகின்றனர்.


