உடுமலை:உடுமலையில், மின்சார தொழிலாளர் சம்மேளனம் காற்றாலை மின் திட்ட கிளை
சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட
தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மஸ்தூர்களுக்கு பதவி
உயர்வு, பணி உயர்வுக்கான பணிக்காலத்தை இரண்டு ஆண்டுகளாக குறைப்பது;
விடுபட்ட ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். காற்றாலை படி
வழங்குவதுடன் காலிப்பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்', உட்பட
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.வட்ட செயலாளர் ஷாஜகான், பொருளாளர்
துரைராஜ், கவுரவ தலைவர் கண்ணன் உட்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.


