பரமக்குடி கலவரத்தில் பாதித்தவர்கள் தே.மு.தி.க., நிதியை வாங்க மறுப்பு
பரமக்குடி கலவரத்தில் பாதித்தவர்கள் தே.மு.தி.க., நிதியை வாங்க மறுப்பு
பரமக்குடி கலவரத்தில் பாதித்தவர்கள் தே.மு.தி.க., நிதியை வாங்க மறுப்பு
ADDED : செப் 17, 2011 11:03 PM
பரமக்குடி: பரமக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தே.மு.தி.க., நிதியை வாங்க மறுத்தனர்.
பரமக்குடியில் செப்.,11ல் நடந்த கலவரத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலியாயினர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என தே.மு.தி.க., அறிவித்திருந்தது. இக்கட்சியின் பொருளாளர் சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் ஜின்னா தலைமையிலான குழு. நேற்று பரமக்குடி அடுத்த பார்த்திபனூர் வந்தனர். இதற்கிடையே
சட்டசபையில் தே.மு.தி.க., சார்பில் 'கலவரச்சம்பவம் தொடர்பாக அரசிற்கு சாதகமாக பேசியதாக' தெரிவித்து, நிதியை பெற விரும்பவில்லை என பாதிக்கப்பட்டோரும் மற்றும் ஒரு பிரிவினர் தே.மு.தி.க.,வினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை. இதனால் தே.மு.தி.க.,வினர் நிதியுடன் திரும்பி சென்றனர்.