Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கிராம ஊராட்சி ஓட்டு சீட்டில் பெயர் இல்லை: சின்னம் மட்டுமே இடம்பெறும்

கிராம ஊராட்சி ஓட்டு சீட்டில் பெயர் இல்லை: சின்னம் மட்டுமே இடம்பெறும்

கிராம ஊராட்சி ஓட்டு சீட்டில் பெயர் இல்லை: சின்னம் மட்டுமே இடம்பெறும்

கிராம ஊராட்சி ஓட்டு சீட்டில் பெயர் இல்லை: சின்னம் மட்டுமே இடம்பெறும்

ADDED : செப் 30, 2011 01:22 AM


Google News

சிவகாசி : ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் வேட்பாளர்களின் பெயர் இன்றி சின்னம் மட்டுமே ஓட்டுச்சீட்டில் இடம் பெறும்.

உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு ஓட்டுச்சீட்டில் ஓட்டளிக்கப்படுகிறது. ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சின்னங்களும், சுயேட்சை சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இச் சின்னங்களுடன் ஓட்டுச்சீட்டில் வேட்பாளர் பெயர் அச்சடிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படும். ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் 30 சுயேட்சை சின்னங்களை பிரிண்ட் செய்து தயார் நிலையில் வைத்துள்ளன. ஒரு கிராம ஊராட்சியில் எத்தனை பேர் போட்டியிடுகின்றனரோ அவர்களுக்கு ஏற்ப தயார் நிலையில் உள்ள சின்னங்கள் இருக்கும். ஒரு ஓட்டு சீட்டில் 10 சின்னங்கள் இருக்கும். ஆனால் ஊராட்சியில் 3 பேர் மட்டும் போட்டியிட்டால் 7 சின்னங்களை தனியே பிரித்து எடுத்து விட்டு வரிசையாக உள்ள 3 சின்னங்கள் மட்டும் ஊராட்சிக்கு வழங்கப்படும். அந்த 3 சின்னங்களை வேட்பாளர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஒரே சின்னத்தை இருவர் கோரினால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். ஊராட்சி தலைவர் பதவிக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுபவர்களுக்கு ஓட்டுச்சீட்டில் வெறும் சின்னங்கள் மட்டுமே இருக்கும். அதில் வேட்பாளரின் பெயர் இடம்பெறாது. கிராம வாக்காளர்கள் சின்னங்களை மனதில் நிறுத்தி 2 ஓட்டுகள் போட வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us