Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மூணாறில் ரம்மிய சீசன் படகு சவாரியில் பயணிகள்

மூணாறில் ரம்மிய சீசன் படகு சவாரியில் பயணிகள்

மூணாறில் ரம்மிய சீசன் படகு சவாரியில் பயணிகள்

மூணாறில் ரம்மிய சீசன் படகு சவாரியில் பயணிகள்

ADDED : அக் 05, 2011 11:49 PM


Google News
மூணாறு : மூணாறு அருகே குண்டளை அணையில் கேரள மின்வாரியத்தினர் ஹைடல் டூரிசம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகிறது.ஏழுபெடல் படகுகளும், துடுப்பு மற்றும் காஷ்மீரியா சிக்காரிய வகை படகுகளும் உள்ளன.

அணையை சுற்றிலும் மரங்களால் சூழப்பட்டு, நீர் தேக்கத்தில் ரம்மியமான தோற்றமும்,அமைதியும் சுற்றுலா பயணிகளை படகு சவாரி செய்ய தூண்டும். இங்கு இயக்கப்படும் படகுகளில் காஷ்மீரியா சிக்காரிய வகை படகுகள் மிகவும் பிரசித்து பெற்றது. இதில் பயணிப்பதை தேனிலவு தம்பதியினர் பெரிதும் விரும்புகின்றனர். அரை மணி நேரத்திற்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மூன்று பேர் பயணிக்க வசதியான பெடல் படகுகளில் அரை மணி நேரத்திற்கு ரூ.100ம்,நான்கு பேர் செல்லக்கூடிய துடுப்பு படகுகளில் அரை மணி நேரத்திற்கு ரூ.150ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us