ADDED : அக் 06, 2011 10:16 PM

கம்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., தி.மு.க., காங்., ம.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணி, பா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.
தேசிய கட்சியான பா.ஜ., ஜகா வாங்கியுள்ளது. முதலில் போட்டியிடப்போவதாக முடிவு செய்திருந்த பா.ஜ., திடீரென பின்வாங்கியது. 33 வார்டுகளில், இரண்டு வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை வாங்கிய பா.ஜ., வின் இந்த முடிவு கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பா.ஜ., நிர்வாகிகளோ, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா... என்கின்றனர்.


