Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.பி.,க்கு மக்கள் நலனில் அக்கறை உண்டுகாங்., செய்தித் தொடர்பாளர் விளக்கம்

எம்.பி.,க்கு மக்கள் நலனில் அக்கறை உண்டுகாங்., செய்தித் தொடர்பாளர் விளக்கம்

எம்.பி.,க்கு மக்கள் நலனில் அக்கறை உண்டுகாங்., செய்தித் தொடர்பாளர் விளக்கம்

எம்.பி.,க்கு மக்கள் நலனில் அக்கறை உண்டுகாங்., செய்தித் தொடர்பாளர் விளக்கம்

ADDED : அக் 08, 2011 12:25 AM


Google News
புதுச்சேரி:என்.ஆர்.காங்., கட்சி இரட்டை வேடம் போடுவதாக காங்., செய்தி தொடர்பாளர் வீரராகவன் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:மத்திய அமைச்சர் நாராயணசாமி, தேவைப்பட்டால் புதுச்சேரி ஆட்சியில் மத்திய அரசு தலையிடும் என கூறியதை மிரட்டல் என என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் பாலன் கூறியுள்ளார். புதுச்சேரி, மத்திய உள்துறை அமைச்சக நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதி. இதற்கென ஒரு இணைச் செயலாளர் உள்ளார். ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் 27 கொலைகள், தொடர் கொள்ளைகள் என சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது.காரைக்காலில் போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு நிதி நெருக்கடி காரணமாக எரிபொருள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.

மக்களை நேரடியாக பாதிக்கும் முக்கிய பிரச்னைகளில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால், மத்திய உள்துறை அமைச்சகம் தலையிடக் கூடாதா? இதை மிரட்டல் என்பதா? அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவர் பாலனுக்கு இது தெரியாதா?

நாராயணசாமி மத்திய அமைச்சர் மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., அவருக்கு மக்கள் நலனில் பொறுப்பு அதிகம் உள்ளது.இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us