/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் தீவிர ஓட்டு சேகரிப்புஅ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் தீவிர ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் தீவிர ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் தீவிர ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : அக் 08, 2011 01:25 AM
நாமக்கல்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., கட்சி
வேட்பாளர்களை ஆதரித்து, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி, சேந்தமங்கலம்
பகுதியில் தீவிர ஓட்டு சேகரித்தார்.
நாமக்கல் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்
பதவிக்கு, சேந்தமங்கலம், 10வது வார்டில் அ.தி.மு.க., சார்பில்,
அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் காந்திமுருகேசன் போட்டியிடுகிறார். அவரை
ஆதரித்து, வருவாய்த்துறை அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்டச் செயலாளருமான
தங்கமணி, சேந்தமங்கலம் யூனியன் பகுதியில், தீவிர ஓட்டு சேகரித்தார்.
அதேபோல், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும், அ.தி.மு.க.,
வேட்பாளர்கள் ராஜாமணி (9வது வார்டு), வாழவந்தி கோம்பை ஜெயமணி (6வது
வார்டு), துரைசாமி (4வது வார்டு), மேரி பாஸ்கர் (5வது வார்டு), பூங்கோதை
(3வது வார்டு), ஆராயி (2வது வார்டு), ராஜசேகர் (1வது வார்டு),
புதுச்சத்திரம் யூனியன் பாபு (4வது வார்டு) ஆகியோரை ஆதரித்தும், அமைச்சர்
தங்கமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும், அந்தந்த பகுதியில்
அமைக்கப்பட்ட தேர்தல் அலுவலகத்தையும், அமைச்சர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், நாமக்கல் எம்.எல்.ஏ., பாஸ்கர், முன்னாள் எம்.பி., அன்பழகன்,
மாவட்ட நிர்வாகி ராஜேஸ்கண்ணா, ஒன்றியச் செயலாளர்கள் வரதராஜன், நடேசன்,
பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள்,
உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


