/உள்ளூர் செய்திகள்/சேலம்/போலீஸ் வேனில் சென்ற வீரபாண்டி ஆறுமுகம் "அலறல்'போலீஸ் வேனில் சென்ற வீரபாண்டி ஆறுமுகம் "அலறல்'
போலீஸ் வேனில் சென்ற வீரபாண்டி ஆறுமுகம் "அலறல்'
போலீஸ் வேனில் சென்ற வீரபாண்டி ஆறுமுகம் "அலறல்'
போலீஸ் வேனில் சென்ற வீரபாண்டி ஆறுமுகம் "அலறல்'
ADDED : ஜூலை 31, 2011 01:32 AM
சேலம்: சேலத்தில் நேற்று கைது செய்யப்பட்ட மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, போலீஸார் அவசர அவசரமாக கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
மின்னல் வேகத்தில் பறந்த போலீஸ் வேனால், வீரபாண்டி ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார்.சேலம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவரை மிரட்டி, நிலத்தை அபகரித்தது தொடர்பாக, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, சேலம் டவுன் ஸ்டேஷனில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவர் கைதான தகவல் அறிந்து, தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர்.பிரச்னை பெரிதாவதற்கு முன், கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உத்தரவால், வீரபாண்டி ஆறுமுகத்தை, சேலம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அங்கிருந்து கிளம்பிய வேன், மின்னல் வேகத்தில் கோவையை நோக்கி பறந்தது.வேனில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். ''எதற்காக இவ்வளவு வேகத்தில் போகிறீர்கள், என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்,'' என, கேட்டபடி இருந்தார். கோவைக்கு, மூன்று மணி நேரத்தில் மட்டுமே செல்ல முடியும். ஆனால், இரண்டு மணி நேரத்தில் சென்று, கோவை மத்திய சிறையில் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸார் ஆஜர்படுத்தினர்.சினிமா போல் மாஜி மந்திரி கைதானதும், அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களும், சேலம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.


