பயங்கரவாதிகளுக்கு பயிற்சி : பாக்., மீது சீனா குற்றச்சாட்டு
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி : பாக்., மீது சீனா குற்றச்சாட்டு
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி : பாக்., மீது சீனா குற்றச்சாட்டு
பீஜிங் : 'ஷின்ஜியாங் மாகாணத்தில், தாக்குதல் நடத்திய உய்குர் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் பயிற்சி அளித்துள்ளது' என, முதல் முறையாக சீனா பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் நடந்த, இந்த பயங்கரவாத தாக்குதல்களில், மொத்தம் ஐந்து பயங்கரவாதிகள் உட்பட, 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, சீனாவில் ரகசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இதுதொடர்பாக சீன அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, கிழக்கு துர்கிஸ்தான் அமைப்பினர்தான் காரணம். தாக்குதலில் ஈடுபடும் முன், அவர்கள் பாக்., சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். பாக்.,கில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு, இதில் நேரடித் தொடர்பு உள்ளது. உய்குர் மதவாதிகளின் தூண்டுதலில், இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனால், சீன மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, ஷின்ஜியாங் மாகாணத்தை சீனாவில் இருந்து துண்டாட நினைக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாக்., அரசு,'' கிழக்கு துர்கிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிப்பதில், சீனாவுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார்'' என கூறியுள்ளது.