/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இடையார்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடுஇடையார்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு
இடையார்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு
இடையார்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு
இடையார்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஆக 02, 2011 12:43 AM
புதுச்சேரி : இடையார்பாளையத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரியாங்குப்பம் கொம்யூனுக்கு உட்பட்ட
இடையார்பாளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட போர்வெல்
மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
போர்வெல் அமைத்து பல ஆண்டுகள்
ஆகிவிட்டதால், குடிநீரின் தன்மை கெட்டு, மக்கள் பயன்படுத்த முடியாத
அளவுக்கு நீரின் சுவை குன்றிவிட்டது. இதனால், இந்த போர்வெல் மூலம்
குடிநீர் வினியோகத்தை நிறுத்தி விட்டனர்.இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட
மற்றொரு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர்
வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து
நாணமேடு, தவளக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்வதால்,
மிகக் குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக, கடந்த இரு
மாதங்களாக இடையார்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி
வருகிறது.குறிப்பாக காலை வேளையில் சமைப்பதற்கும், குளிப்பதற்கும் போதுமான
தண்ணீர் கிடைக்கப் பெறாமல், மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும்.