Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/60 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி தனியார் ஊழியர் தற்கொலை மிரட்டல் :மூன்று மணி நேரம் போராடிய போலீஸ்

60 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி தனியார் ஊழியர் தற்கொலை மிரட்டல் :மூன்று மணி நேரம் போராடிய போலீஸ்

60 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி தனியார் ஊழியர் தற்கொலை மிரட்டல் :மூன்று மணி நேரம் போராடிய போலீஸ்

60 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி தனியார் ஊழியர் தற்கொலை மிரட்டல் :மூன்று மணி நேரம் போராடிய போலீஸ்

ADDED : ஆக 03, 2011 01:19 AM


Google News

சென்னை : தன்னையும், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஊழியர்களையும் மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் எனக்கேட்டு, உருக்காலை ஊழியர், 60 அடி உயர, குடிநீர் தொட்டியின் மேல் ஏறி, தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த சம்பவம் எண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் மூன்று மணி நேர போராட்டத்துக்குப்பின் ஊழியரை கீழே இறக்கினர். சென்னை காசிமேடைச் சேர்ந்தவர் மோசஸ் வில்லியம், 42. சென்னை எண்ணூரில் உள்ள உருக்காலையில் பணியாற்றி வருகிறார். நிறுவனத்தில் சிலரிடம் தகராறு செய்ததாக இவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, அங்கு சுவாமிநாதன் என்ற ஊழியர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். நிறுவன மருத்துவ அதிகாரி, சரியான சிகிச்சை அளிக்காததால்தான் இறந்தார் எனக்கூறி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால், பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



ஆறு மாதமாகியும் இன்னும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில் லை. இதனால் விரக்தியடைந்த மோசஸ் வில்லியம், நேற்று காலை 9 மணிக்கு எண்ணூர் உருக்காலை வந்தார். நிறுவனத்தில் உள்ள, 60 அடி உயர, மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் மேல் ஏறினார். 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் சென்றவர், பாதி மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு, திடீர் போராட்டத்தில் குதி த்தார். 'என்னையும், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மற்ற ஊழியர்கள், 53 பேரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தீக்குளித்து சாவேன்' என மிரட்டல் விடுத்தார். இதையறிந்த தொழிலாளர்கள், சுற்றியுள்ள கிராம மக்கள், எண்ணூர் உருக்காலை முன் கூடினர். நிறுவன பொது மேலாளர் கோபிநாத், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் நவநீத கிருஷ்ணன் மற்றும் போலீசார், மிரட்டல் ஊழியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



அப்போது, தனது கோரிக்கையை ஒரு பேப்பரில் எழுதி, நூலில் கட்டி கீழே அனுப்பி வைத்தார். 'உடனடியாக 53 பேரையும், மீண்டும் பணியில் சேர்க்கும் ஆர்டர் போட்டு, மேலே எனக்கு அனுப்பி வைத்தால், நான் கீழே இறங்குவேன்' என்று எழுதியிருந்தார். போலீசார் அவரிடம் நீண்ட நேரம், ஒலிபெருக்கி மூலம் பேச்சுவார்த் தை நடத்தினார். 'கீழே வா, உன் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்' என்று தெரிவித்தனர். கவுன்சிலர் பிரபா மற்றும் அப்பகுதி பிரமுகர்களும் பேசினர். இதில் சமாதானமடைந்த மோசஸ் வில்லியம், பகல் 12 மணிக்கு கீழே இறங்கி வந்தார். மூன்று மணி நேர போராட்டத்துக்குப்பின், கீழே வந்த ஊழியரை, போலீசார் குண்டுக்கட்டாக ஜீப்பில் தூக்கிப் போட்டு, போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். 'இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றம். இனிமேல் அவ்வாறு செய்தால், கைது செய்து சிறையில் தள்ளிவிடுவோம்' என, எச்சரித்து அனுப்பினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us