/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரசு விடுதியில் தரம் இல்லாதஉணவு வழங்குவதாக புகார்அரசு விடுதியில் தரம் இல்லாதஉணவு வழங்குவதாக புகார்
அரசு விடுதியில் தரம் இல்லாதஉணவு வழங்குவதாக புகார்
அரசு விடுதியில் தரம் இல்லாதஉணவு வழங்குவதாக புகார்
அரசு விடுதியில் தரம் இல்லாதஉணவு வழங்குவதாக புகார்
ADDED : ஆக 03, 2011 01:33 AM
தர்மபுரி: தர்மபுரி அரசு அம்பேத்கர் கல்லூரி மாணவர் விடுதியில்
மாணவர்களுக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் புகார்
தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி, ஒட்டப்பட்டியில் அரசு அம்பேத்கார் கல்லூரி மாணவர் விடுதியில்,
402 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் வார்டனாக துரை மற்றும் துணை
வார்டனாக பழனிசாமி ஆகியோர் பணியில் உள்ளனர்.விடுதியில் மாணவர்களுக்கு
வழங்கப்படும் உணவு தரமில்லாமலும், சுகாதார குறைபாடுடனும் இருப்பதாக
மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில்
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில், அனைத்து
மாணவர்களுக்கும் சேர்த்து உணவு செலவின கணக்கு எழுதப்படுவதாகவும் மாணவர்கள்
குற்றம்சாட்டியுள்ளனர்.உணவு சமைக்கும் விடுதியில் போதிய சுகாதார வசதிகள்
பின்பற்றுவதில்லை, கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகள் சீரான பராமரிப்பு
இல்லாமல், தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.


