/உள்ளூர் செய்திகள்/மதுரை/தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்'கண்காட்சியை பாராட்டும் பெண்கள்தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்'கண்காட்சியை பாராட்டும் பெண்கள்
தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்'கண்காட்சியை பாராட்டும் பெண்கள்
தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்'கண்காட்சியை பாராட்டும் பெண்கள்
தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்'கண்காட்சியை பாராட்டும் பெண்கள்
ADDED : ஆக 07, 2011 02:49 AM
மதுரை:மதுரை தமுக்கம் மைதானத்தில் தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி
நடைபெற்று வருகிறது. @நற்று மூன்றாவது நாள் கண்காட்சியில், பார்க்கும்
ஒவ்வொரு ஸ்டாலும் வித்தியாசமாக, பொருட்களை வாங்கத் தூண்டும் ஆர்வத்தை
ஏற்படுத்துவதாக, பெண்கள் தெரிவித்தனர்.*உஷா, ராஜபாளையம்: முதல் முறையாக
கண்காட்சியை பார்க்கிறேன். வாக்குவம் கிளீனர் வாங்கினேன். ஸ்டாலை சுற்றி
பார்ப்பதற்குள் பசித்தது. சாப்பிட்ட பின், மீண்டும் ஒரு சுற்று பார்வையிட
வேண்டும்.
* வித்யா, ஆத்திகுளம் : இதுவரை பார்க்காத சாதனங்களை கண்காட்சியில் பார்க்க
முடிந்தது. பழங்களை பிழியும் ஜூஸர் வாங்கியுள்ளேன். ரொம்ப ரொம்ப உபயோகமாக
ஸ்டால்களை அமைத்த, தினமலர் இதழுக்கு நன்றி.*ஹர்ஷிதா, சொக்கிகுளம் : எனக்கு
பிடித்தது உணவுகளுக்கான ஸ்டால்கள் தான். ஆந்திர, கேரள, வடமாநில உணவுகளும்,
நம்ம ஊர் கிராமத்து சமையலும் சூப்பர். ஸ்டால்களில் வாங்கியதும் உணவு
பொருட்கள் தான்.*தங்கம், விருதுநகர்: தோழிகளோடு குழந்தைகளையும் அழைத்து
வந்துள்ளேன். ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல, ஒரே திருவிழா கூட்டம். ஆயிரம்
பேரோடு, நாமும் சேர்ந்து பொருட்கள் வாங்குவது சந்தோஷம்.
*விஜயலட்சுமி, விருதுநகர்: கண்காட்சியை பார்க்கறதுக்காக, ரயிலேறி
வந்துள்ளோம். குழந்தைகளுக்கான ஆடைகள், எங்களுக்கு நைட்டிகள் எடுத்துள்ளோம்.
உடையாத மெலமைன் பொருட்கள், வாங்கும் ஆர்வத்தை தூண்டியது.