/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சென்னையில் 5,6 தேதிகளில் விசாரணைதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சென்னையில் 5,6 தேதிகளில் விசாரணை
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சென்னையில் 5,6 தேதிகளில் விசாரணை
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சென்னையில் 5,6 தேதிகளில் விசாரணை
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சென்னையில் 5,6 தேதிகளில் விசாரணை
ADDED : செப் 04, 2011 02:01 AM
கடலூர்:தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை 5, 6 தேதிகளில்
சென்னையில் நடைபெறவுள்ளது.தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டத்தின் கீழ்
குடிமக்கள் எந்த பிரிவினரையும் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்ட 8
பட்டியலில் எந்தவொரு வகுப்பும் கூடுதலாக சேர்க்கப்பட்டது அல்லது
சேர்க்கப்படாமல் விடுபட்டது தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்தும்,
அது சரியானது என்று கருதும் ஆலோசனையினை மத்திய அரசுக்கு தேசிய
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்க வேண்டியுள்ளது.அதன்படி தலைவர் நீதியரசர்
ராவ், உறுப்பினர் கார்வேந்தன், தீபக் கடோலே மற்றும் உறுப்பினர் முனைவர்
ஷகில் உஸ்மான் அன்சாரி ஆகியோர் அடங்கிய ஆணையம் கீழ் குறிப்பிட்டுள்ள
ஜாதிகள், வகுப்புகள் உட்பிரிவுகள், ஒத்த பிரிவுகளை தமிழ்நாடு
மாநிலத்திற்கான மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்
சேர்ப்பதற்காக சென்னையில் இம்மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் பொது விசாரணை
நடத்த உள்ளது.
பாண்டிய வெள்ளாளர், சேரகுல வெள்ளாளர், வல்லநாட்டு செட்டியார்,
இலத்தீன் கத்தோலிக்க கிறித்தவ வண்ணார் (கன்னியாகுமரி மாவட்டத்தில்)
தொரையர் (சமவெளி), ஷத்திரிய நாயுடு, எர்ர கொல்லர் உள்ளிட்ட 15 ஜாதிகள்
காலையிலும், மேலும் 15 ஜாதிகள் பிற்பகலிலும் விசாரணை
நடக்கிறது.மேற்குறிப்பிட்ட ஜாதிகள், உபஜாதிகள், சங்கங்கள், அமைப்புகள், தனி
நபர்கள் ஆணையத்தின் முன்பாக ஆஜராகி விவரங்கள் அளிக்கலாம். இந்த விசாரணை
7335 அண்ணா சாலை, சென்னை 600002 என்ற முகவரியில் உள்ள எல்.எல்.ஏ.,
கட்டடத்தில் நடக்கிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


