/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கடத்திச் செல்லப்பட்ட சிறுமி கிணற்றில் பிணமாக மீட்புகடத்திச் செல்லப்பட்ட சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு
கடத்திச் செல்லப்பட்ட சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு
கடத்திச் செல்லப்பட்ட சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு
கடத்திச் செல்லப்பட்ட சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு
ADDED : செப் 06, 2011 01:08 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி, கிணற்றில் பிணமாக மிதந்தார்.
அவரது உடலை கிராம மக்கள் மீட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்களவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி அய்யம்மாள். இவர்களது மகள் லாவண்யா, 6. கடந்த 2ம் தேதி மாலை ஏரிக்கரை அருகே லாவண்யா தனது பெரியப்பா மகள் கண்ணகி, 5 என்ற சிறுமியுடன் விளையாடி கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், திடீரென லாவண்யாவை கடத்தி சென்றனர். இது பற்றி கண்ணகி பெற்றோரிடம் கூறியதின் பேரில் மயிலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் குமார் என்பவரது கிணற்றில், நேற்று காலை லாவண்யா உடல் மிதந்ததை அறிந்து கிராம மக்கள் மீட்டனர். தகவலறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி., குப்புசாமி, இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் விசாரணை நடத்தினர்.


