/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நில அபகரிப்பு வழக்கில் பாதிக்கும் சார்பதிவாளர்நில அபகரிப்பு வழக்கில் பாதிக்கும் சார்பதிவாளர்
நில அபகரிப்பு வழக்கில் பாதிக்கும் சார்பதிவாளர்
நில அபகரிப்பு வழக்கில் பாதிக்கும் சார்பதிவாளர்
நில அபகரிப்பு வழக்கில் பாதிக்கும் சார்பதிவாளர்
ADDED : செப் 07, 2011 11:01 PM
விருதுநகர் : நில அபகரிப்பு வழக்கில், சார்பதிவாளர்களை குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதால் பாதிக்கப்படுகின்றனர்.
நில அபகரிப்பு குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் முதல் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படுகின்றனர்.இதன் வழக்கில் சார்பதிவாளர்களையும் குற்றவாளிகளாக சேர்க்கின்றனர். இதனால் இவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர்.
சார்பதிவாளர் சங்க பொது செயலாளர் பால்சாமி கூறுகையில், ''சார்பதிவாளர்கள் நில அபகரிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதை தடுக்க,மாநில பதிவாளர், செயலாளர், பதிவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.


