Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நகரெங்கும் ஒட்டப்படும் ஆபாச போஸ்டர் அவலம்

நகரெங்கும் ஒட்டப்படும் ஆபாச போஸ்டர் அவலம்

நகரெங்கும் ஒட்டப்படும் ஆபாச போஸ்டர் அவலம்

நகரெங்கும் ஒட்டப்படும் ஆபாச போஸ்டர் அவலம்

ADDED : செப் 16, 2011 01:26 AM


Google News
திருப்பூர்:திருப்பூரில் பள்ளி, கல்லூரி அருகிலும், பொது இடங்களிலும் ஆபாச சினிமா போஸ்டர்கள் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், இளம் சமுதாயத்தினர் திசை மாறும் அபாயம் உள்ளது. ஆகையால், ஆபாச போஸ்டர் ஒட்டுவோர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூரில் 23க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளன. தற்போது வெளிவரும் சினிமா படங்களில் பெரும்பாலும் ஆபாசம் மிகுந்த காட்சிகள் இடம் பெறுவதோடு, அவையே போஸ்டர்களாகவும் வருகின்றன. சில தியேட்டர் களில், வயது வந்தவர்களுக்கு மட்டு மான 'ஏ' படங்கள் மட்டுமே திரையிடப்படுகின்றன. அவற்றின் போஸ்டர்கள், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளிலும், பொது இடங்களிலும் அதிகளவு ஒட்டப்படுகின்றன.போஸ்டர்களில், இளைஞர்களை கவரும் வகையில் ஆபாசமாக வும், உணர்வுகளை தூண்டும் வகையிலான படங்களும், வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. அதைப் பார்க்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறான பாதைக்கு திசை மாறுவதோடு, படிக்கும் வயதில் ஆபாச திரைப்படங்களுக்கு செல்லும் வகையில் அமைகிறது.

பொது இடங்களில் ஒட்டப்படுவதால், பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், குடும்பத்துடன் செல்பவர்களுக்கும் சங்கடத்தையும் ஏற்படுத்தி வருகிறது.ஆபாசம் மிகுந்த சினிமா போஸ்டர்களை பொது இடங்களில் ஒட்டக்கூடாது என்ற தடையை மீறி, திருப்பூரில் அதிகளவு ஒட்டப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆபாசம் மிகுந்த போஸ்டர்கள் மீது தியேட்டர் உரிமையாளர்களே கருப்பு பெயின்ட் அடித்தோ, பேப்பர்களை ஒட்டியோ போஸ்டர்களை ஒட்டுவர். தற்போது ஒட்டப்படும் போஸ்டர்களில் அவ்வாறு மறைக்கப்படுவதில்லை.திருப்பூர் பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம், நெரிசலான குடியிருப்புகள் காரணமாக, கலாசார சீரழிவுகள் அரங்கேறி, விரும்பத்தகாத சம்பவங் களும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றன. இளைய சமுதாயம், மது போதை, கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி, குற்றச்சம்பவங்கள் அதிகரித்து, அதிகளவு இளைஞர்கள் பாதித்து வருகின்றனர்.இந்நிலையில், இதுபோன்ற ஆபாச போஸ்டர்கள், இளைய சமுதாயத்தை மேலும் சீரழிக்கும் அபாயம் உள்ளது. அதிலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள், சமுதாய சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. எனவே, ஆபாச போஸ்டர் ஒட்டுவோர் மீது அதிகாரிகளும், போலீசாரும் கவனம் செலுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தனியாக போஸ்டர் அடிப்பதில்லை; தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களிடம் இருந்து வருவதையே ஒட்டுகிறோம்.

பெரும் பாலான படங்களின் போஸ்டர்கள், அப்படித்தான் வருகின்றன.ஆபாசம் அதிகமாக உள்ளதே, ஒட்ட முடியுமா என தயாரிப்பாளர்களிடம் கேட்டால், அனுமதி பெற்றுத்தான் அச்சடிக்கிறோம்; ஒட்டுங்கள் என்கின்றனர். ஆபாசம் அதிகமுள்ள போஸ்டர்களை முடிந்தளவுக்கு தவிர்க்கிறோம். தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சங்கத்தின் சார்பில் ஆபாச போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம், என்றார்.எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் கேட்ட போது,''ஆபாச போஸ்டர் ஒட்டப்படுவது குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்கள் பகுதியில் ஆபாசம், அருவருக்கத்தக்க வகையில் போஸ்டர் இருந்தால் புகார் செய்யலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us