Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கட்டுக் கடங்காத கூட்டம் கண்டு கொள்ளாத போலீசார்

கட்டுக் கடங்காத கூட்டம் கண்டு கொள்ளாத போலீசார்

கட்டுக் கடங்காத கூட்டம் கண்டு கொள்ளாத போலீசார்

கட்டுக் கடங்காத கூட்டம் கண்டு கொள்ளாத போலீசார்

ADDED : செப் 28, 2011 11:50 PM


Google News

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஒன்றிய அலுவலகத்தில் மனுதாக்கல் செய்ய வருபவர்களுடன், ஏராளமானோர் வருகின்றனர்.

இவர்களை போலீசார் கட்டுப்படுத்துவதில்லை.ராமநாதபுரம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி, ஒன்றிய, மாவட்ட கவுன்சில் ஆகியவற்றுக்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் 25 ஊராட்சிகளுக்கு, ஐந்து உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மனுதாக்கல் செய்யும்போது, மொத்தம் நான்கு பேர் மட்டுமே உடன் வரவேண்டும், என்ற விதி உள்ளது. இதை மீறி சில முக்கிய நபர்கள் வரும்போது, இவர்களுடன் கட்டுங்கடங்காமல் கூட்டமும் வருகிறது. இதை தடுக்க வேண்டிய போலீசார் கை கட்டி நிற்கின்றனர்.மனுதாக்கல் அறையில் செல்லும் அத்தனை பேரும் பேசிக்கொண்டே இருப்பதால், உதவி தேர்தல் அலுவலர்கள் பணியில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே கூடுதல் போலீசாரை நியமித்து, குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் மற்றவர்களை மனுத்தாக்கல் செய்யுமிடத்தில் அனுமதிக்கக்கூடாது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us