ADDED : அக் 05, 2011 12:50 AM
மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் மீனா குமாரி, 45.
நேற்று முன் தினம் மதியம் 1.30 மணிக்கு தையல் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது ராம்நகர் அருகே டூவீலரில் வந்த இருவரில் ஒருவர், மீனாகுமாரியின் 18 பவுன் நகையை பறித்துச் சென்றார். ஜெய்ஹிந்துபுரம் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்.ஐ., பாலமுருகன் ஆகியோர், டூவீலர் பதிவெண் உதவியால் நகைபறித்த ஹரிஹரனை விரட்டி பிடித்தனர். அவருடன் வந்த நண்பர் குறித்து விசாரணை நடக்கிறது.


