/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக ஆலோசனை கூட்டம்அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 05, 2011 01:17 AM
காரிமங்கலம்:உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும்
வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று (அக்., 5)
நடக்கிறது.மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ.,அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் உள்ளாட்சி
தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம்
மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில்
நடக்கிறது.
காலை 11 மணிக்கு பாலக்கோடு தொகுதி வெள்ளிச்சந்தை ராஜம் திருமண
மண்டபத்திலும், 12 மணிக்கு பென்னாகரம் தொகுதி பாப்பாரப்பட்டி விநாயகர்
திருமண மண்டபதிலும், 1 மணிக்கு தர்மபுரி மாவட்ட கட்சி அலுவலகத்திலும்,
மதியம் 2 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கடத்தூர் எம்.சி.எஸ்., திருமண
மண்டபதிலும், மாலை 3 மணிக்கு அரூர் தொகுதியில் காமாட்சியம்மன் திருமண
மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.மாநில கொள்கை பரப்பு செயலாளர்
எம்.பி., தம்பிதுரை, அமைச்சர் பழனியப்பன், மாநில ஜெ., பேரவை செயலாளர்
அன்பழகன் ஆகியோர் பேசுகின்றனர். மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள்,
சார்பு அணி நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள், வேட்பாளர்கள் தவறாமல் கலந்து
கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


