/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வாய்ப்புநெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வாய்ப்பு
நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வாய்ப்பு
நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வாய்ப்பு
நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வாய்ப்பு
ADDED : அக் 07, 2011 10:24 PM
விருதுநகர் : கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 18 பகுதிகளில் 1232 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. 3 லட்சம் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் முதியோர் உதவித்தொகை திட்டம், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவச வேட்டி, சேலை, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை பணிகள் செய்து வருகின்றனர். இலவச வேட்டி, சேலை திட்டத்தில் மிக குறைந்த அளவு பணிகள் மட்டுமே,கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால், ஆண்டு முழுவதும் பணிகள் இல்லாத நிலையில், கஷ்டப்பட்டு வந்தனர். இந்தாண்டு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு செட் சீருடை வழங்க, அக்., 30 வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது முடிந்தவுடன், அடுத்த ஆண்டுக்கான மாணவர்களுக்கு நான்கு செட் சீருடை வழங்கப்படவுள்ளது. இந்த உற்பத்தி நவ.,1 முதல் துவக்கப்படவுள்ளது. இதே நேரத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தியும் இருப்பதால், நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் உற்பத்தி பணிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதனால், நெசவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


