/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு "தடா' தி.மு.க., வக்கீல் அணி கண்டனம்ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு "தடா' தி.மு.க., வக்கீல் அணி கண்டனம்
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு "தடா' தி.மு.க., வக்கீல் அணி கண்டனம்
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு "தடா' தி.மு.க., வக்கீல் அணி கண்டனம்
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு "தடா' தி.மு.க., வக்கீல் அணி கண்டனம்
ADDED : அக் 08, 2011 11:47 PM
திருச்சி: முதல்வர் ஜெயலலிதா வருகையை காரணம் காட்டி, ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்காத போலீஸ் துறைக்கு, தி.மு.க., வக்கீல் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, திருச்சி மாவட்ட தி.மு.க., வக்கீல் அணி சார்பாக நிர்வாகி பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:திருச்சி உள்ளாட்சித் தேர்தலுடன், மேற்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில்,முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருச்சியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியாக, திருச்சி மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய திருச்சி மாநகர போலீஸாரிடம் அனுமதி கேட்டபோது, அனுமதி மறுக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின் பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்தனர்.அதேபோல், அக்., 9ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தைக் காரணம் காட்டி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு போலீஸார் அனுமதி தர மறுக்கின்றனர்.திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறையின் ஒருதலைப்பட்சமான போக்கை தி.மு.க., வக்கீல் அணி சுட்டிக்காட்டியும் தமிழக தேர்தல் கமிஷன் கண்டு கொள்ளாமல் இருப்பது, திருச்சியில் நேர்மையாக தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


