/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மூன்று பேரூராட்சிகளில் மூச்சு முட்டும் பிரசாரம்மூன்று பேரூராட்சிகளில் மூச்சு முட்டும் பிரசாரம்
மூன்று பேரூராட்சிகளில் மூச்சு முட்டும் பிரசாரம்
மூன்று பேரூராட்சிகளில் மூச்சு முட்டும் பிரசாரம்
மூன்று பேரூராட்சிகளில் மூச்சு முட்டும் பிரசாரம்
ADDED : அக் 10, 2011 02:49 AM
கூடலூர் : தேவர்சோலை, நடுவட்டம், ஓவேலி பேரூõட்சி தலைவர் பதவிகளை பிடிக்க அரசியல் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.கடந்த 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூடலூர் சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட தேவர்சோலை (எஸ்.சி., பெண்), நடுவட்டம் (பொது), ஒவேலி (பொது, பெண்) ஆகிய பேரூõட்சிகளின் தலைவர் பதவிகளை தி.மு.க., கைப்பற்றியது.
தற்போது, தேவர்சோலை பேரூõட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் தற்போதைய தலைவர் கலைசெல்விக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர சபியா(அ.தி. மு.க.,), சுலோக்சனா(காங்.,),நிர்மலா(தே.மு. தி.க.,), சுயேச்சைகளாக உஷா, டெய்சிராணி, லீலா, ஷீபா ஆகிய 8 பேர் போட்டியிடுகின்றனர்.நடுவட்டம் பேரூராட்சியில், உதயகுமார் (தி.மு.க.,), குலாப்ஜான் (அ.தி.மு.க.,), சாந்தகுமார் (தே.மு.தி.க.,), சுயேச்சைகள் கிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஓவேலி பேரூராட்சியில், பூங்கொடி (தி.மு.க.,), ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,), வனராணி (காங்.,), வனஜா (தே.மு.தி.க.,) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த மூன்று பேரூராட்சிகளின் தலைவர் பதவிகள் தி.மு.க.,வசம் உள்ளதால், இதனை தக்க வைத்து கொள்ள அக்கட்சியின் கடுமையாக போராடி வருகின்றனர். தி.மு.க.,விடமிருந்து தலைவர் பதவியை கைப்பற்ற, ஆளும் கட்சியான அ.தி.மு.க., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்து போட்டியிடுவதால், காங்கிரஸ் பெரும் நம்பிக்கையுடனும்; 'யாரும் எதிர்பாராத வெற்றி எங்களுக்கு கிடைக்கும்,' என தே.மு.தி.க.,வும் முனைப்புடன் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதனால், மூன்று பேரூராட்சியிலும் பிரசாரம் களை கட்டியுள்ளது.


