/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பரபரப்பு வாக்குறுதிகள் கை கொடுக்குமா?பரபரப்பு வாக்குறுதிகள் கை கொடுக்குமா?
பரபரப்பு வாக்குறுதிகள் கை கொடுக்குமா?
பரபரப்பு வாக்குறுதிகள் கை கொடுக்குமா?
பரபரப்பு வாக்குறுதிகள் கை கொடுக்குமா?
ADDED : அக் 12, 2011 02:18 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
பல்வேறு வாக்குறுதிகளை கூறி ஓட்டு சேகரித்த போதும், நகரின் முக்கிய
அடிப்படை வசதியான சாலை கட்டமைப்பு வசதி, நிரந்தர ஆக்கிரமிப்பு அகற்றம்,
நெரிசல் இல்லாத போக்குவரத்துக்கு வாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவைகள்
நிறைவேறுமா? என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் தலைநகர் அந்தஸ்து பெற்ற தர்மபுரி நகரம் மாவட்டம்
பிரிக்கப்பட்டது முதல் இன்று வரையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்,
சுகாதாரம் உள்ளிட்டவைகளில் மிகவும் பின் தங்கியுள்ள நிலையில் உள்ளது.
மாவட்ட தலைநகரா? என கேட்டுகும் வகையில் எந்த எழிலும் இல்லாமல் சாலை
கட்டமைப்பு வசதிகளில் பின் தங்கி தினம் வாகனங்கள் நெரிசலில் சிக்கி
திணறுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.,
வெற்றி பெற்றது. 2001ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
2006ம் ஆண்டு நடந்த நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் தி.மு.க.,
கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி நகராட்சி தலைவர் பதவிக்கு வந்தது.
திராவிட கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரையில் நகராட்சி தலைவர் பதவியை
அலங்கரித்த போதும், இது வரையில் நகரின் வளர்ச்சிக்கு பெயர் சொல்லும் அளவில்
பணிகளை செய்யாமல் போனது மக்கள் எதிர்பார்ப்புகள் நிøவேறறாமல்
போனது.குறிப்பாக நகரை அழகுபடுத்தும் திட்டம் ஆய்வு பணிகளோடு முடிந்தது.
நகரின் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக அகற்ற முடியாமல்
அதிகாரிகள் திணறுவதோடு, பெயருக்கு நடக்கும் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு
பின் நகராட்சி ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஆசியுடன் நகரின் முக்கிய
சாலைகளில் ஆக்கிரமிப்புகள் முளைத்து கொள்வதால், தினம் முக்கிய சாலைகளில்
போக்குவரத்து நெரிசல் என்பது வேதனைக்குரியதாக மாறிப்போனது. சுகாதார
நிலையும் கேள்விக்குறிதான். சில குறிப்பிட்ட பகுதியில் மட்டும் குப்பைகளை
அள்ளும் அவலம், சில குறிப்பிட்ட பகுதியில் குப்பைகள் குவியலாய் துர்
நாற்றம் அடிக்கும் நிலை இன்று வரையில் தொடர்ந்து வருகிறது. சில வார்டுகள்
அடிப்படை வசதிகள் முதல் பல்வேறு வளர்ச்சிகள் செய்யாமல்
புறக்கணிக்கப்படுவதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.சொத்து வரியை குறைக்க
உருப்படியான நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டும், நகராட்சியில் பல்வேறு
பணிக்கு செல்லும் மக்கள் பல இன்னல்களை சந்திக்கும் நிலையிருப்பதாகவும்
மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்
வகையில் இது வரையில் எந்த கட்சி நகராட்சி தலைவர்களும் செயல்பட வில்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.
இத்தனை தேவைக்கும், எதிர்பார்ப்புக்கும் இடையில் நகராட்சி தலைவர் பதவிக்கு
அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 13 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
அனைத்து வேட்பாளர்களும் நகரின் சுகதாரம், குடிநீர் தேவைகள், அடிப்படை
வசதிகள் அனைத்தும் நிறைவேற்றுவதாக வாக்குறுதிகள் கொடுத்து வருகின்றனர்.
சுயேச்சை வேட்பாளர்களும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக தேர்தல்
வாக்குறுதிகளை வீசி வந்தாலும், நகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள்
நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே
நேரத்தில் அவர் செய்யாததை இவர் செய்ய மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது. நகரின் சாலை கட்டமைப்பு வசதி, நிரந்தரமாக ஆக்கிரமிப்பு
அகற்றம், நகரை எழில் படுத்த திட்டம், சுகாதாரத்தை பேண நடவடிக்கை உள்ளிட்ட
மக்கள் அடிப்படை பிரச்னைகள் தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள்
மத்தியில் எழுந்துள்ளது.தேர்தல் களத்தில் வெற்றியை நோக்கி முன்னேறும்
வேட்பாளர்கள் தேர்தல் வெற்றிக்கு பின் மக்கள் திட்டங்களை செயல்படுத்திட
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழக்கமான எதிர்பார்ப்புடன் மக்கள் வரும்
17ம் தேதி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.


