ADDED : அக் 12, 2011 11:42 PM
கோவை:டிரேட் இந்தியா கண்காட்சி நிறுவனம் சார்பில் 'பவுண்டரி டெக் 2011'
கண்காட்சி, திருச்சி ரோட்டிலுள்ள விஜயா பொருட்காட்சி வளாகத்தில் நாளை
துவங்குகிறது; வரும் 16ல் நிறைவடைகிறது.ஆட்டோ ஷெல் குழும நிறுவனங்களின்
மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணசாமி ஜெயபால் துவக்கி வைக்கிறார். 'இந்தியன்
இன்ஸ்டியூட் ஆப் மெட்டல்ஸ்' நிபுணர்கள் சார்பில் பவுண்டரியில் கையாள
வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடக்கிறது. இதில், 70
பவுண்டரி நிறுவனங்களின் பணியாளர் பங்கேற்கின்றனர்.இரண்டாம் நாள், 'பயர்ஸ்
அண்ட் செல்லர்ஸ்' சந்திப்பு நடக்கிறது. இதில், 25 முன்னணி நிறுவனங்கள்
பங்கேற்கின்றன.
கோவை மற்றும் தென்னிந்திய பவுண்டரியில் பணிபுரியும் பணியாளர்கள் பயன்பெறும்
வகையிலும், மாசுபடுதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து அறியும் வகையில்
இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும்
கண்காட்சியில், பவுண்டரி இயந்திரங்கள், மூலப்பொருட்கள் இடம்பெறுகின்றன.


