ADDED : அக் 13, 2011 02:07 AM
புதுச்சேரி:உழவர்கரையில் காசு வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது
செய்தனர்.ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் உழவர்கரை பகுதியில்
ரோந்து சென்றனர்.
அப்போது, மாதா கோவில் வீதியில் உள்ள சர்ச் அருகில், ஒரு
கும்பல் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அவர்களை போலீசார் கைது
செய்தனர்.விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, சுதாகர்ரவி,
பெரினோ, அன்பழகன், கிறிஸ்டியன் ராஜ், சூசை, செயின்ட், பிரான்சுவா என்பது
தெரிய வந்தது.


