/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மேல்காரணை கிராமத்தில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்மேல்காரணை கிராமத்தில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
மேல்காரணை கிராமத்தில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
மேல்காரணை கிராமத்தில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
மேல்காரணை கிராமத்தில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
ADDED : அக் 13, 2011 03:41 AM
விழுப்புரம்:சங்கீதமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
சார்பில் மேல்காரணையில் சிறப்பு முகாம் நடந்தது.மேல்காரணை அரசு உயர் நிலை
பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தூய்மை பணி மேற்கொண்டனர். அகர்வால் கண்
மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமிற்கு மேல் காரணை ஊராட்சி தலைவர் சம்பத் தலைமை தாங்கினார்.
முனியபிள்ளை வரவேற்றார். உதவி திட்ட அலுவலர் மனோகர் முன்னிலை வகித்தார்.
மேல்காரணை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அனந்தநாராயணன்
சிறப்புரையாற்றினார். முதுகலை ஆசிரியர் ஏழுமலை கண் சிகிச்சை முகாமை துவக்கி
வைத்தார். முகாமில் 300 பேர் சிகிச்சை பெற்றனர்.


