/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மருதுபாண்டியர், தேவர் குருபூஜைக்கு திறந்த லாரி, வேனில் செல்ல தடை : எஸ்.பி., பன்னீர்செல்வம்மருதுபாண்டியர், தேவர் குருபூஜைக்கு திறந்த லாரி, வேனில் செல்ல தடை : எஸ்.பி., பன்னீர்செல்வம்
மருதுபாண்டியர், தேவர் குருபூஜைக்கு திறந்த லாரி, வேனில் செல்ல தடை : எஸ்.பி., பன்னீர்செல்வம்
மருதுபாண்டியர், தேவர் குருபூஜைக்கு திறந்த லாரி, வேனில் செல்ல தடை : எஸ்.பி., பன்னீர்செல்வம்
மருதுபாண்டியர், தேவர் குருபூஜைக்கு திறந்த லாரி, வேனில் செல்ல தடை : எஸ்.பி., பன்னீர்செல்வம்
ADDED : அக் 14, 2011 10:53 PM
சிவகங்கை : ''பசும்பொன் குருபூஜை, மருதுபாண்டியர் பூஜைக்கு செல்வோர் திறந்த வேனில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்,'' என, சிவகங்கை எஸ்.பி.,பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மருதுபாண்டியர் பூஜை, பசும்பொன் தேவர் குருபூஜை செல்வோருக்கான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடந்தது.
கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., வேம்புலிங்கம், கூடுதல் எஸ்.பி., கண்ணன் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., துர்காமூர்த்தி, டி.எஸ்.பி.,க்கள் ஸ்டாலின், மங்களேஸ்வரன், அகில இந்திய பார்வர்டுபிளாக் மாநில நிர்வாகி முத்துகாதர், தேவர் பேரவை சுப்பு, மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாவட்ட செயலாளர் போஸ், கொள்கை பரப்புசெயலாளர் தமிழரசன், மாவட்ட செயலாளர் கண்ணன் பங்கேற்றனர்.
எஸ்.பி., பேசுகையில், போலீஸ் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்லவேண்டும். வாகனங்களின் மேற்கூரையில் சரக்கு வைக்கும் கேரியரை அகற்றவேண்டும். மினி லாரி, டாடா ஏஸ் போன்ற திறந்த வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி கடிதம் பெற்ற பின்னரே, செல்லவேண்டும் என்றார். எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஏற்பாட்டை செய்திருந்தார்.


